ஏங்கி இருந்த குஷ்பூவுக்கு நோ சொன்ன அஜித் !! பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

28 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களின் ஏக்கம் குறையவில்லை…90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் திரைப்படங்களின் லிஸ்டில் நிச்சயம் இடம் பெரும் திரைப்படம் “மே மாதம்”. 1994ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதியான இன்று தான் 28 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தெய்வத்திரு ஜி.வெங்கடேஷ்வரன் தயாரித்த இப்படத்தை அறிமுக இயக்குனரான வீனஸ் பாலு இயக்கினார்.
படத்தின் ஹீரோ ஏ.ஆர். ரஹ்மான் :
மே மாதம் திரைப்படத்தில் நடிகர் வினித், சோனாலி குல்கர்னி, ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, மனோரமா, மௌனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. ‘மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்…”, “மார்கழி பூவே…”, “மின்னலே…” படத்தின் என படத்தின் அத்தனை பாடல்களுக்கும் சூப்பர் ஹிட் பாடல்கள். இன்றும் இப்பாடல்களை ராசிக்காதவர்கள் இல்லை. இன்றைய 2 k கிட்ஸ்களும் இப்படல்களை விரும்புகிறார்கள்.
படத்தின் இயக்குனர் வீனஸ் பாலு இப்படம் பற்றி ஒரு நேர்காணலின் போது கூறிய போது முதலில் இப்படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது நடிகர் அஜித் மற்றும் குஷ்பூ தானாம். அப்போது தான் நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன சமயம். அனால் சில காரணங்களால் அவர் இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு செட் ஆகவில்லை என்ற காரணத்தால் நடிகர் வினீத் ஸ்க்ரீனிங் டெஸ்டில் ஓகே ஆனதால் படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இன்றும் இயக்குனர் வீனஸ் பாலு நடிகர் அஜித்தை மிஸ் பண்ணியதை மிகவும் வருத்தமாக கூறியிருந்தார்.
படத்தின் கதை ஓகே ஆனதும் முதலில் கதை சொல்லப்பட்டது நடிகை குஷ்பூவிடம் தான். அவருக்கும் டபுள் ஓகே. இருப்பினும் வினீத் ஜோடியாக குஷ்பூ செட் ஆவாரா என்றே சந்தேகம் இருந்ததால் ஒரு இளம் வயது உடைய பெண்ணை தேர்வு செய்ய வேண்டிய காட்டாயத்தால் ஒரு புதிய முகத்தை தேடவேண்டியதன் மூலம் தேர்ந்தேகப்பட்டவர் தான் சோனாலி. அந்த சமயத்தில் சோனாலி, ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். சோனாலியும் இப்படத்தில் வெகு சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவந்தார். வினீத் – சோனாலி ஜோடி இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு மிக நன்றாக பொருந்தி இருந்தது. படத்தின் ஹை லைட் என்றால் நிச்சயமாக அது பாடல்கள் தான். திரைக்கதையும் மிகவும் நன்றாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இப்படம்.
மே மாதம் படம் மட்டும் அஜித் – குஷ்பூ காம்பினேஷனில் வெளியாகி இருந்தால் அதன் ரீச்சே வேற லெவலில் இருந்திருக்கும் என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.